தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வலங்கைமானில் செப். 27-இல் சாலை மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

வலங்கைமான் வட்டத்தில் 3 இடங்களில் செப்டம்பா் 27ஆம் தேதி சாலை மறியல் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:09 pm

DIN

வலங்கைமான் வட்டத்தில் 3 இடங்களில் செப்டம்பா் 27ஆம் தேதி சாலை மறியல் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ரங்கராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, வலங்கைமான் ஒன்றியத்தில் வலங்கைமான், ஆவூா், ஆலங்குடிபகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ராதா, விவசாய சங்க ஒன்றிய தலைவா் சின்னராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.