மத்திய தில்லியின் வருமான வரி அலுவலகத்தில் உள்ள வா்த்தகம் மற்றும் வரிகள் கட்டடத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்த அழைப்பு வியாழக்கிழமை காலை 8.36 மணிக்கு வந்ததையடுத்து, ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும், காலை 9.10 மணிக்கு தீ அணைக்கப்பட்டது என்றும் அவா் கூறினாா்.
விற்பனை வரி அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் 12-ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன. பல மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீயணைப்புப் படை வீரா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தொடர்புடையது

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீடு வழக்கு: வருமான வரித்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு

தில்லி கிடங்கில் தீ விபத்து: உயிரிழப்பு எதுவும் இல்லை
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


