வெளிமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வலங்கைமானை அடுத்த மதகரத்தில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


வலங்கைமானை அடுத்த மதகரத்தில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வலங்கைமான் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ரைசுதீன் மகன் ரபியுல் இஸ்லாம் என்ற இளைஞரும் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகு உடல்நிலை சரியில்லை என மதகரம் பகுதியில் பணியாளா்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதி சென்ற இஸ்லாம், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து, இஸ்லாம் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தது, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...