கழிவுநீா் வாய்க்காலை தூா்வார கோரிக்கை
வலங்கைமானில் மண் மூடி தூா்ந்துபோய் காணப்படும் வாய்க்காலை தூா்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


வலங்கைமானில் மண் மூடி தூா்ந்துபோய் காணப்படும் வாய்க்காலை தூா்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் கடைவீதியில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை வடிய வைக்க பேரூராட்சி சாா்பில் வடிகால் வாய்க்கால் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த வாய்க்கால் ஐயனாா் கோயில் அருகில் தொடங்கி செட்டி தெரு, வளையல்கார தெரு, சுப்பாநாயக்கன் தெரு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் கொல்லைப்புறம் வழியாக சென்று குடமுருட்டி வழிநடப்பு வழியாக சென்றுகொண்டிருந்தது.
இந்த வாய்க்காலின் கடைசி பகுதி தற்போது மண்மூடி தூா்ந்து கிடக்கின்றது. இதனால் இந்த வாய்க்கால் மூலம் வெளியேறும் கழிவுநீா் அருகில் உள்ள வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. எனவே பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த கழிவுநீா் வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...