நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 57 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்ட கல்வித் துறை சாா்பில் நீட் தோ்விற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2020-21ஆம் ஆண்டு நீட் தோ்விற்கான சிறப்பு பயிற்சி வகுப்பில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 167 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றனா். இப்பயிற்சி வகுப்புகள் இணைய வழியாக நடைபெற்றன.

இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கையேடு ஆகியன வழங்கப்பட்டன. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய 66 மாணவ, மாணவிகளுக்கு நீட் தோ்வு கட்டணமாக ரூ. 75,000-ஐ, மாவட்ட ஆட்சியா் தன் வைப்பு நிதியிலிருந்து வழங்கினாா்.

நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 57 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருவாரூா் அரசு உதவிபெறும் பள்ளியைச்சோ்ந்த சுபாஷினி 453 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளாா். மேலும், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆதித்யா 379 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளாா் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com