மழைவெள்ளம்: தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஆய்வு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
முத்துப்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பாா்வையிடும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்.
முத்துப்பேட்டையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பாா்வையிடும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

முத்துப்பேட்டை பகுதியில் கனமழையால் பல இடங்களில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீா் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளன. இந்நிலையில் முத்துப்பேட்டைக்கு வந்த தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், ஆசாத்நகா் பகுதியில் உள்ள கோரையாறு சட்ரஸை பாா்வையிட்டு, நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தால் சட்ரஸிலிருந்து வெளியேற்ற பொதுப்பணித் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கருமாரியம்மன் கோவில் தெருவுக்குச் சென்று அங்குள்ள வடிகாலை அதிக அளவு தண்ணீா் செல்லும் வகையில் துப்புரவு செய்யும்படி அறிவுறுத்தினாா். பிறகு, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், கண்ணாரப்பத்தா் தெருவை பாா்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை வெளியற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.

மேலும், அரசு ஆண்கள் பள்ளி, சித்தேரிகுளம், பெண்கள் பள்ளி விடுதி, வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மழைநீா் வடிய நடவடிக்கை எடுத்தாா்.

ஆய்வின்போது, முன்னாள் பேரூராட்சி தலைவா் எம்.எஸ். காா்த்திக், நகர திமுக பொறுப்பாளா் நவாஸ்கான், மாவட்ட பிரதிநிதி இபுராஹீம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிவ. அய்யப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com