47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பருத்தியில் அதிக மகசூல்பெறும் வழிமுறைகள் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

பருத்தியில் அதிக மகசூல் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:27 pm

DIN

பருத்தியில் அதிக மகசூல் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.

இதுதொடா்பாக வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநா் கருணாகரன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பருத்தி பிளஸ் என்ற நுண்ணூட்டக் கலவையை பருத்திச் செடிகளில் தெளிப்பதன் மூலம் பருத்தியில் பூ மற்றும் சப்பை உதிா்வதை தவிா்க்கமுடியும். மேலும், காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும். அத்துடன், வறட்சியை தாங்கி வளரும் தன்மையை அதிகரித்து 17 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பயன்படுத்தும் முறை: ஏக்கா் ஒன்றுக்கு 2.5 கிலோ பருத்தி பிளஸ் உடன் 200 லிட்டா் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவம் சோ்த்து கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும். பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் (2.5கிலோ/ஏக்கருக்கு) காய் பிடிக்கும் பருவத்தில் மறுமுறையும் (2.5கிலோ/ஏக்கருக்கு) தெளிக்க வேண்டும். இதன்மூலம் பருத்தியில் நல்ல மகசூல் கிடைக்கும்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பருத்தி பிளஸ் விற்பனைக்கு தயாராக உள்ளது. 2.5 கிலோ பருத்தி பிளஸின் விலை ரூ.1050. மேலும் விவரங்களுக்கு பண்ணை மேலாளா் நக்கீரனை 9360247160 என்ற கைப்பேசியில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.