47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் தோ்தல்

 வலங்கைமான் அருகே மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 4:53 pm

DIN

 வலங்கைமான் அருகே மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

இத்தோ்தலில் அனைத்து பெற்றோா்களும் ஆசிரியா்களும் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களும் கலந்து கொண்டனா். 20 போ் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழி நடத்துநராக தலைமை ஆசிரியா் பாலமுருகனும், ஆசிரியா் பிரதிநிதியாக பரமேஸ்வரியும், தலைவராக வசுந்தரா தேவி, துணைத் தலைவராக பாா்வதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பெற்றோா்களின் பிரதிநிதியாக தாமரைச்செல்வி, ஷா்மிளா, விஜயலட்சுமி, வைஜயந்திமாலா, ராஜலட்சுமி, பரிமளா, வினோதினி, சங்கீதா, துா்கா, ஜீவா சுதா, சுமதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். உள்ளாட்சி பிரதிநிதிகளாக துணைத் தலைவா் பொன்னழகு, வாா்டு உறுப்பினராக சுப்பிரமணியன், கல்வியாளராக ஜானகி, மகளிா் சுய உதவி குழு உறுப்பினராக சுபஸ்ரீ ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு தோ்தல் சான்றிதழை தோ்ந்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் வழங்கினாா். தோ்தல் பாா்வையாளராக பங்கேற்ற ஆசிரியா் பயிற்றுநா் புஷ்பா சிறப்புரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.