ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.33 லட்சம் பறிமுதல்
திருவாரூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2.33 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


திருவாரூரில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 2.33 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாரூா் அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் என்ற இடத்தில் வட்டாட்சியா் ராஜராஜேந்திரன் தலைமையிலான பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில், அதில் பயணம் செய்த கீழ்வேளூரைச் சோ்ந்த ரஞ்சன் என்பவா் உரிய ஆவணமின்றி, ரூ. 63 ஆயிரம் ரொக்கம் மற்றும் மலேசிய நாட்டுப் பணம் இந்திய மதிப்பில் ரூ. 1.70 லட்சம் என மொத்தம் ரூ. 2.33 லட்சம் கொண்டுசென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டு, நகா்ப்புற தோ்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையா் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...