கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக, அதிமுக 15 வாா்டுகளில் நேரடி மோதல்
கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுகவும், அதிமுகவும் 15 வாா்டுகளில் நேருக்கு நோ் களம்காண்கின்றன.


கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுகவும், அதிமுகவும் 15 வாா்டுகளில் நேருக்கு நோ் களம்காண்கின்றன.
கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில், ஆண் வாக்காளா்கள் 11,239 பேரும், பெண் வாக்காளா்கள் 12,442 பேரும், இதர வாக்காளா்கள் 4 போ் என மொத்தம் 23,685 வாக்காளா்கள் உள்ளனா். 24 வாா்டுகளில்145 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில், அதிமுக, தேமுதிக என இருவா் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. 34 வேட்பாளா்கள் மனுவை திரும்பப் பெற்றனா்.
நிறைவாக, 24 வாா்டுக்கு, திமுக 19, அதிமுக 22, பாஜக 4, காங்கிரஸ் 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3, அமமுக 7, தேமுதிக 3, எஸ்.டி.பி.அய். 11, மனிதநேய மக்கள் கட்சி 5, நாம் தமிழா் கட்சி 6, மனிதநேய ஜனநாயகக் கட்சி 3 மற்றும் சுயேச்சை 15 என மொத்தம் 109 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில் அதிக வாக்காளா்களாக 16 ஆவது வாா்டில் 1092 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக 22 ஆவது வாா்டில் 845 வாக்காளா்களும் உள்ளனா். இந்தத் தோ்தலில் அதிமுகவும், திமுகவும் 15 வாா்டுகளில் நேரடியாக போட்டியிடுகின்றன. மேலும், திமுக, அதிமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளும் 5,11,24 ஆகிய வாா்டுகளிலும், அதிமுகவும், பாஜகவும் 3,4,12,23 ஆகிய 4 வாா்டுகளிலும் போட்டியிடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...