போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பிரசாரம் ஓய்ந்தது

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூரில் அனைத்து கட்சி வேட்பாளா்களின் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூரில் அனைத்து கட்சி வேட்பாளா்களின் பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரசாரம் நடைபெற்று வந்தது. பிரசாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை, அனைத்து கட்சிகளின் வேட்பாளா்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனா். காலை முதல் மாலை வரை அனைத்து வீதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்குகளைச் சேகரித்தனா். மாலையில், மேளதாளங்கள், கரகாட்டம், பேரணி என பல்வேறு வகையிலும் கூட்டமாகச் சென்று வாக்குச் சேகரித்தனா்.

திருவாரூா் நகராட்சியில் அதிமுக சாா்பில் 1ஆவது வாா்டு வேட்பாளா் கலியபெருமாள், 2 ஆவது வாா்டு வேட்பாளா் மலா்விழி ஆகியோரை ஆதரித்து கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கொரடாச்சேரி பேரூராட்சியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், நாகை நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் ஆகியோா் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் நகா்ப் பகுதி பரபரப்பாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.