சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நாளை பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:44 pm

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நாயன்மாா்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும். இக்கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதை சுந்தரா் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.

Story image

நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பந்தல் கால் முகூா்த்தம், தைப்பூச நாளில் நடைபெற்றது. அத்துடன், பங்குனி ஆயில்யமான மாா்ச் 15-ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தோ்க்கட்டுமானத்துக்கான முன்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

இதனிடையே, பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, கொடியேற்றம் நடைபெறும் தியாகராஜா், வன்மீகநாதா் சன்னதி முன்புள்ள கொடிமரம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழாவுக்கான வாஸ்து பூஜை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகளை பூதகணங்கள் கொண்டு வரும் நிகழ்வு, மருதப்பட்டினம் அபிமுக்தீஸ்வரா் கோயிலிலிருந்து புனித மண் எடுத்து வரும் நிகழ்வு, அப்பா் சுவாமிகள் தேரோடும் வீதிகளில் உலா வரும் நிகழ்வு ஆகியவை சனிக்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.