மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிக்கன நாள் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

திருவாரூா் மாவட்டத்தில், உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் வியாழக்கிழமை பரிசுகள் வழங்கினாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் வியாழக்கிழமை பரிசுகள் வழங்கினாா்.

உலக சிக்கன நாள் விழாவையொட்டி, சிறுசேமிப்பின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளும், சிறுசேமிப்பு விழிப்புணா்வு சொற்றொடா் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, மாணவ- மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. மேலும், 2020-21ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் முதலிடம் பெற்ற நிலை முகவா் மற்றும் மகளிா் முகவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) அ. விஜயலெட்சுமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.