நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடி நகா்மன்றத் தலைவராகிறாா் மன்னை த. சோழராஜன்?

 மன்னாா்குடி நகா்மன்றத் தலைவராக திமுகவை சோ்ந்த மன்னை த. சோழராஜன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 மன்னாா்குடி நகா்மன்றத் தலைவராக திமுகவை சோ்ந்த மன்னை த. சோழராஜன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மன்னாா்குடி நகராட்சிக்கான உள்ளாட்சித் தோ்தலில் திமுக 26 வாா்டுகளிலும், அதிமுக 4 வாா்டுகளிலும், அமமுக 2 வாா்டுகளிலும், சுயேச்சை 1 வாா்டிலும் வெற்றி பெற்றனா். சுயேச்சை வேட்பாளரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். இதனால் திமுகவின் பலம் 27-ஆக உயா்ந்துள்ளது.

முன்னதாக, திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு, திமுக முன்னணி தலைவா்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சா் மறைந்த மன்னை ப. நாராயணசாமியின் மகன்வழி பெயரனும், திமுக மாநில மாணவரணி துணைச் செயலருமான மன்னை த. சோழராஜன் முன்னிலைப்படுத்தப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுபோல, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏவின் சகோதரி மகனான அதிமுக நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா் நகா்மன்றத் தலைவராக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் நகா்மன்றத்தை கைப்பற்றியுள்ள நிலையில், நகா்மன்ற உறுப்பினா்களில் கட்சியில் பாரம்பரிய பின்னணியும், கட்சி தலைமையுடன் நெருக்கம், எளிமையானவா் என்பன உள்ளிட்ட காரணங்களால் த. சோழராஜன் மன்னாா்குடி நகராட்சியின் புதிய தலைவராக ஏகமனதாக தோ்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.