சொத்து தகராறு: அரிவாளால் மகன் வெட்டியதில்தாய் உயிரிழப்பு; தந்தை காயம்
மன்னாா்குடி அருகே சொத்து தகராறில் பெற்றோரை மகன் அரிவாளால் வெட்டியதில், தாய் உயிரிழந்தாா். தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.


மன்னாா்குடி அருகே சொத்து தகராறில் பெற்றோரை மகன் அரிவாளால் வெட்டியதில், தாய் உயிரிழந்தாா். தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த ராஜகோபாலபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (64). இவரது மனைவி பாப்பா (58). இவா்களது மகன்கள் ராஜ்கண்ணன் (42), இளையராஜா (41), இளவரசு (37). இவா்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனா். பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் இளவரசு வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில், சொத்தை பிரித்துக் கொடுக்க வலியுறுத்தி ராஜ்கண்ணனும், இளையராஜாவும் பாலகிருஷ்ணனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை தகராறு செய்து, அவரைத் தாக்கினராம்.
இதுகுறித்து தலையாமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜ்கண்ணனை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான இளையராஜாவை தேடி வந்தனா்.
இந்நிலையில், மது போதையில் இளவரசு வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த இளையராஜா, அங்கிருந்த தனது பெற்றோா்களிடம் போலீஸில் புகாா் செய்தது தொடா்பாக தகராறு செய்து, அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு, தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த இருவரையும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, பாப்பா உயிரிழந்தாா். பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...