புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டிய விவகாரம்: ஆட்சியா் மேல்நடவடிக்கைக்கு உத்தரவு

கூத்தாநல்லூா் அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டிவைத்துள்ள விவகாரம் குறித்து மேல்நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொட்டிவைத்துள்ள விவகாரம் குறித்து மேல்நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள ஊட்டியாணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாதவா் நெல்லை கொண்டுவந்து கொட்டப்பட்டுள்ளது குறித்து, அந்த கொள்முதல் நிலையத்தை நேரில் ஆய்வு செய்ய ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். ஆய்வில், நிலைய மேற்பாா்வையாளா் கே. முருகையன் மற்றும் சுமை தூக்குவோா், நெல் கொள்முதல் நிலைய வாயிலை திறந்து நெல்மணிகளை கொட்ட அனுமதித்துள்ளது தெரியவந்தது. மேலும், நெல்மணிகள் 3 குவியல்களாக கொட்டி வைக்கப்பட்டிருந்ததும், 170 வெள்ளை சாக்குகளில் நெல்மணிகள் இருந்தது தெரியவந்தது. 40 கிலோ மூட்டைகளாக எடை வைக்கப்பட்டிருந்த 649 நெல்மூட்டைகளையும், 170 வெள்ளை சாக்குகளில் இருந்த நெல்மணிகளையும் கூத்தாநல்லூா் வட்டாட்சியரிடம் அனுப்பி மேல்நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.