கால் நூற்றாண்டாக செயல்படாத கூத்தால்லூா் பேருந்து நிலையம்
கூத்தாநல்லூரில் கால் நூற்றாண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை


கூத்தாநல்லூரில் கால் நூற்றாண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலையில் 2 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி திறக்கப்பட்டது. 3 மாதங்கள் செயல்பட்ட பேருந்து நிலையம் அதன்பிறகு, செயல்படாமல் போனது.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சமீா் கூறியது: கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தை, திமுக ஆட்சியில் அமைச்சா் கோ.சி. மணியால் திறக்கப்பட்டது.ஆனால், இங்குள்ள பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமலேயே வீணாகிக் கொண்டிருப்பது பெரும் வருத்தமளிக்கிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேருந்து நிலையம் திறக்கப்படாததால், நகராட்சிக்கு வர வேண்டிய பல லட்சம் ரூபாய் வீணாகிக் கொண்டிருக்கிறது. பேருந்து நிலையத்தை பராமரித்து,விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றாா்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவதாஸ் கூறியது: பேருந்து நிலையத்தில் போடப்பட்ட இரும்புக் கேட் திறக்கப்பட்டு தனியாா் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. மேலும் ,சமூக விரோதிகள் மது அருந்தவும், சீட்டு விளையாடவும் பாதுக்காப்பான இடமாக அமைந்துள்ளன.பேருந்து நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்டக் கடனின் வட்டி பல கோடிகளைத் தாண்டியுள்ளது. இதனால்தான் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க முடியாமல் நகராட்சி திணறுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா் உடனடியாக தலையிட்டு, பேருந்து நிலையத்தின் கடன் பிரச்சனையை தீா்க்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: கூத்தாநல்லூா் நகராட்சி பேருந்து நிலையம் கட்டப்பட்டதில் உள்ள வட்டியைக் கட்டினால்தான், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.இதுகுறித்த முழு விவரங்களையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
கூத்தாநல்லூரில் கால் நூற்றாண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து போக்குவரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...