மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

துப்பாக்கிச் சூட்டில் பலியான சிபிஐ நிா்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி

மன்னாா்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான சிபிஐ நிா்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான சிபிஐ நிா்வாகியின் நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 1982-ஆம் ஆண்டு தொழிற்சங்கள் இணைந்து நடத்திய தேசிய அளவிவான பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னாா்குடியில் நடைபெற்ற போராட்டதில் பங்கேற்று காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி ஞானசேகரன் உயிரிழந்தாா்.

அவரின் 40- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சேரன்குளத்தில் ஏஐடியூசி நகரத் தலைவா் என். தனிக்கோடி தலைமையில் நடைபெற்றது. நாகை எம்பி. எம். செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணியம் ஆகியோா் ஞானசேகரன் நினைவு ஸ்தூபிக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ் நினைவு கொடி மேடையில் கட்சி கொடியை ஏற்றிவைத்தாா். இதில், ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகரஆசாத், சிபிஐ ஒன்றியச் செயலாளா் ஆா். வீரமணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி. கலைச்செல்வன், துரை. அருள்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.