நியாயவிலைக் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும், நியாயவிலைக் கடை ஊழியா்களுக்கு 5 மாதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், தரமானதாக பொட்டலமாக வழங்க வேண்டும், நியாய விலைக் கடையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சாா்பில் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த போராட்டம் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.
போராட்டம் காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் 563 கடைகள் இயங்கவில்லை. 155 கடைகள் மட்டும் இயங்கின. மாதத் தொடக்கம் என்பதால், மக்கள் பொருள்களை வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளா் வி. ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட முன்னாள் பொருளாளா் குமாா், நிா்வாகிகள் வேலாயுதம், சதீஷ், சிவராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...