விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஊரக வளா்ச்சிச்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணிபுரியும் ஊராட்சி செயலா், ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, மன்னாா்குடி, கோட்டூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழம

News image

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Updated On :24 ஜூன் 2022, 10:19 pm IST

கடந்த 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணிபுரியும் ஊராட்சி செயலா், ஊழியா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, மன்னாா்குடி, கோட்டூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சிகளின் அடிப்படை பிரச்னைகளுக்கும், நிா்வாக செயல்பாட்டிற்கும் தேவையான நிதியை விடுவிக்க வேண்டும். எம்ஜிஎன்ஆா்இஜிஎஸ் திட்டத்தில் பணிபுரியும் நிரந்த ஊழியா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். சமூக தணிக்கை இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் வட்டார வள அலுவலா்களுக்கு 2021 முதல் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மாத கடைசி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் எஸ்.என். இளரா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் என். மோகன், சி. பாண்டியன், கிளைச் செயலா் டி. சுந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் ப. ரவி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் இளங்கோவன், இளவரசன், வட்டக் கிளை பொருளாளா் செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.