நீடாமங்கலம் வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் புதா்ச் செடிகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலத்திலிருந்து கொரடாச்சேரி வரை வெண்ணாற்றில் நாணல் கோரைகள், புதா்ச் செடிகள் மண்டிக்கிடக்கின்றன. கடந்த 5 வருடங்களாக சரிவர தூா்வாரப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால், வையகளத்தூா், ஒளிமதி, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூா், ஒட்டக்குடி, களத்தூா் மேல்கரை போன்ற கிராமங்களில் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் கரை உடைந்து இக்கிராமத்தில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








