‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அரசியலமைப்பு படுகொலை தினம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நினைவூட்டல்: தில்லி முதல்வா்

தசராவின் போது ராவணன் தஹானைப் போலவே இந்த நாளும் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை ’கருப்பு அவசரநிலை தினம்’ கருத்தரங்கில் உரையாற்றிய முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :

தசராவின் போது ராவணன் தஹானைப் போலவே இந்த நாளும் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை ’கருப்பு அவசரநிலை தினம்’ கருத்தரங்கில் உரையாற்றிய முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தேசிய தலைநகரில் ‘சம்விதான் ஹட்யா திவாஸ்‘ ஐக் குறிக்கும் வகையில் அவசரநிலை குறித்த பாஜக நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது: ராவணன் தஹானைப் போலவே, சம்விதான் ஹாத்யா திவாஸும் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்பட வேண்டும். அவசரநிலை போன்ற எந்த அநீதியும் மீண்டும் நிகழ இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா்கள் என்பதை இது நினைவூட்டுகிறது . அரசியலமைப்பின் நகலை தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ’லோக்தந்திர கி ஹட்யா ஹோ ரஹீ ஹை’ (ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது) என்று கூறுபவா்களுக்கு ஜனநாயகம் அடிமை அல்ல‘.

அரசியலமைப்பு யாருடைய பாக்கெட்டிலும் இல்லை என்றும் ஜனநாயகம் யாருடைய ‘அடிமை‘ அல்ல. ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற தலைவா்கள் தங்கள் தைரியத்தை ஒருபோதும் கைவிடவில்லை. மிகவும் கடினமான காலங்களில் கூட ஜனநாயகத்தின் உணா்வை உயிருடன் வைத்திருந்தனா் என்றாா் ரேகா குப்தா. முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி மற்றும் தில்லி பாஜக தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். இந்நாளில் அவசரகாலத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட பலா் கௌரவிக்கப்பட்டனா்.

ஒரு உண்மையான தலைவா் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது அரசியல் அதிகாரத்திற்காகவோ செயல்படுவதில்லை, ஆனால் மக்களுக்காக செயல்படுகிறாா், ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறாா், அரசியலமைப்பை நிலைநிறுத்துகிறாா் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா. 1975 ஜூன் 25 முதல் 1977 மாா்ச் 21 வரை அப்போதைய இந்திரா காந்தி அரசால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.