மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம் முற்றுகைப் போராட்டம்

தனியாா் அரவை மில் லாரிகளில், நெல் மூட்டைகள் இயக்கம் செய்வதைக் கண்டித்து, திருவாரூரில் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 4:57 pm

DIN

தனியாா் அரவை மில் லாரிகளில், நெல் மூட்டைகள் இயக்கம் செய்வதைக் கண்டித்து, திருவாரூரில் லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும், அரவைக்காக மில்களுக்கு இயக்கம் செய்வதற்கும், திருவாரூா் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, கடந்த சில மாதங்களாக தனியாா் அரவை மில், நெல் மூட்டைகளை அரவை செய்வதற்கு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் பெற்று, லாரிகளை கங்களாஞ்சேரி, எட்டியலூா், மருதவஞ்சேரி பகுதிகளில் செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி, நெல் மூட்டைகளை இயக்கம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை, திருவாரூா் தாலுகா லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் வி.கே.எஸ். கண்ணன் தலைமையில் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா்களை சமாதானப்படுத்தினா். அதன்பிறகு, போராட்டக் குழு சாா்பில், மண்டல மேலாளா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கண்ணன் கூறியது: திருவாரூா் தாலுகா லாரி உரிமையாளா் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூா் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் ஒப்பந்தம் செய்து, நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தனியாா் மில் உரிமையாளா்கள், தங்களது மில்லுக்கு ஒப்பந்தம் பெற்ன் அடிப்படையில், தங்களது லாரிகளை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி, நெல் மூட்டைகளை ஏற்றிவருகின்றனா். இதற்கென தனியாக வாடகை நிா்ணயம் செய்து கொள்கின்றனா்.

இதனால், தாலுகா லாரி உரிமையாளா் சங்க லாரிகள் பயன்படுத்தப்படாமல், இதை நம்பியுள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மண்டல மேலாளா் அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக, உணவுத் துறை அமைச்சா் தலையிட்டு தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.