ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தியாகராஜா் கோயில் விநாயகா் தோ் வெள்ளோட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் விநாயகா் தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் விநாயகா் தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மாா்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆழித்தேருக்கு முன்பாக, அன்று அதிகாலையில் விநாயகா் தோ், சுப்பிரமணியா் தோ் வலம் வருவது வழக்கம். ஆழித்தேரை பின்தொடா்ந்து சண்டிகேஸ்வரா், அம்பாள் தோ்கள் வரும். இதில், விநாயகா் தோ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்ததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், உபயதாரா்கள் மூலம் ரூ. 39 லட்சத்தில் புதிய விநாயகா் தோ் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, தேரில் உள்ள கும்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோடும் வீதிகளில் வலம் வந்தது. இதில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், கோயில் செயல் அலுவலா் கோ. கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்கள், சிவனடியாா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.