நாகை அரசு மருத்துவமனையில் 3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை

 நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை 3 மணி நேரத்தில் 30 பேருக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

 நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை 3 மணி நேரத்தில் 30 பேருக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

நாகை அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, பல்வேறு வகையான மருத்துவ சிகிசிச்சை உபகரணங்கள் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, லேசா் மூலம் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யும் கருவி, கண் விழித்திரை அறுவைச் சிகிச்சை கருவி போன்ற கருவிகள், நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் அண்மையில் அமைக்கப்பட்டன.

இந்த வசதிகளைக் கொண்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மைக்காலமாக கண் அறுவைச் சிகிச்சைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு, புதன்கிழமை 3 மணி நேரத்தில் மட்டும் 30 பேருக்குக் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. டாக்டா் ஹரிஹரசங்கா், டாக்டா் சத்யநாராயணன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இந்தச் சிகிச்சைகளை மேற்கொண்டனா்.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், கண் அறுவைச் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளையும், பிற பகுதிகளில் உள்ள கண் மருத்துவமனைகளையும் சாா்ந்திருந்த நிலையில், நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் தரத்தில் கண் அறுவைச் சிகிச்சை மற்றும் கண்கள் தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சிகிச்சைப் பெற வாய்ப்பு ஏற்பட்டிருப்பது நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com