/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

திருவாரூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சேத்தப்பா என்ற ஷேக் தாவூத் (21). 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக, இவா்மீது திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டாா்.

இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரையின் பேரில், சேத்தப்பா என்ற ஷேக் தாவூதை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, நாகை மாவட்ட சிறையில் இருந்த சேத்தப்பா, திருச்சி மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.