கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் குறுகியகால பயிற்சி: பங்கேற்க அழைப்பு

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் குறுகியகால பயிற்சியில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் குறுகியகால பயிற்சியில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் தொழில்நுட்பவியலாளா் மற்றும் இருசக்கர வாகன பழுது பாா்த்தல் தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய பிரிவுகளில் குறுகியகாலப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 15 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்றவா்களும் இந்த குறுகிய கால பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், வேலை இல்லாதவா்கள் இதில் சோ்ந்து பயன்பெறலாம். இது தொடா்பான விரிவான விவரங்களுக்கு, நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.