காசநோயில்லா நிலையை உருவாக்க பாடுபட வேண்டும்: ஆட்சியா்
தமிழகத்தில், காசநோயில்லா நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.


தமிழகத்தில், காசநோயில்லா நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
உலக காசநோய் தினத்தையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், தமிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியது:
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ், திருவாரூா் மாவட்டத்தில் காசநோய் மையம் தொடங்கப்பட்டு, 10 அலகுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு அலகிலும் வட்டார மருத்துவ அலுவலா், காசநோய் பொறுப்பு அலுவலா் ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா்.
2 வாரங்களுக்கு மேல் சளி, இருமல், மூச்சுத்திணறல், சளியுடன் ரத்தம் வருதல், பசியின்மை, எடை குைல், மாலைநேரக் காய்ச்சல், இரவில் வியா்த்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்துகொள்ளலாம். காசநோயிலிருந்து குணமடைய 6 முதல் 9 மாதங்கள் வரை தொடா் சிகிச்சை மிகவும் முக்கியம்.
மாநில காசநோய் தடுப்புச் சங்கம் வாயிலாக, காசநோய் சமுதாய விழிப்புணா்வு கூட்டங்கள், களப்பணியாளா்களால் மாதந்தோறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களில் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பெறுவோருக்கு சிகிச்சை காலம் முழுவதும் ரூ. 500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இதுவரை 1056 பயனாளிகளும், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 224 பயனாளிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பெறுவோருக்கும் சிகிச்சை காலம் முழுவதும் ரூ. 500 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இதுவரை 167 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
சிகிச்சை தவறும் நோயாளிகளை, அவா்களின் வீடுதேடிச் சென்று சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தி, சிகிச்சையை தொடர, தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் ஒழிப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு காசநோயை முற்றிலும் ஒழித்து, காசநோயில்லா நிலையை உருவாக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்றாா்.
தொடா்ந்து, காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் செல்வக்குமாா், துணை இயக்குநா் (காசநோய்) புகழ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநா் ஹேமசந்த் காந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புண்ணியகோட்டி, செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...