/

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய வழக்கில், இளைஞருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்ப

News image
Updated On :25 மார்ச் 2022, 4:41 pm

DIN

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய வழக்கில், இளைஞருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் அருகே பெருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் (26). இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அய்யப்பன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாராம்.

Story image

அந்த மாணவிக்கு ஓராண்டுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோா், நன்னிலம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், அய்யப்பனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், அய்யப்பனின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்காகவும், கா்ப்பமாக்கிய குற்றத்துக்காகவும் தலா 20 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், தலா ரூ. 3000 என மொத்தம் ரூ. 6000 அபராதம் விதித்தும் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜி. விஜயகுமாா் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.