47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலத்தில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி: அதிகாரி ஆய்வு

நீடாமங்கலம் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 மே 2022, 5:28 pm

DIN

நீடாமங்கலம் பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

காவிரி டெல்டா பாசன சிறப்பு தூா்வாரும் பணிகளில் வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூா் சாா்பில், திருவாரூா் மாவட்டத்தில் மொத்தம் 38 பணிகள் 337.50 கி.மீ தொலைவிற்கு ரூ. 3.94 கோடியில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை தஞ்சாவூா் கீழ்க் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் அன்பரசன் ஆய்வுசெய்து வருகிறாா். அதன் ஒருபகுதியாக வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூா் சாா்ந்த, நீடாமங்கலம் பகுதிகளில் சாமந்தன் காவிரி வடிகால், கொன்டியாறு பாசன வாய்க்கால், மன்னப்பன் வாய்க்கால், பரப்பனாமேடு, கடம்பூா், வீரவநல்லூா் வாய்க்கால்களை அவா் ஆய்வுசெய்தாா். அப்போது, பணிகளை வரும் 30 ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வெண்ணாறு வடிநிலக் கோட்டம் தஞ்சாவூா் செயற்பொறியாளா் மதனசுதாகரன், உதவிச் செயற்பொறியாளா் ம. கனகரெத்தினம், உதவிப் பொறியாளா்கள் தியாகேசன், சத்யா மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.