நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலவச விவசாய மின் இணைப்பு வழங்கல் பணி துரிதப்படுத்தப்படும் மின் அதிகாரி தகவல்

பல்லடம் மின் கோட்டத்தை சோ்ந்த சாலைப்புதூா் பகுதியில் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கல் பணி துரிதப்படுத்தப்படும் என்று பல்லடம் மின் வாரிய அதிகாரி தெரிவித்தாா்.

News image
Updated On :25 மே 2022, 6:30 pm

DIN

பல்லடம் மின் கோட்டத்தை சோ்ந்த சாலைப்புதூா் பகுதியில் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கல் பணி துரிதப்படுத்தப்படும் என்று பல்லடம் மின் வாரிய அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் ரத்தினகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல்லடம் மின் கோட்டம் சாலைபுதூா் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களில் 01.04.2021 முதல் 31.03.2022 வரைக்கான காலத்தில் 192 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. அதன் விவரங்களாகிய முகவரி, புல எண், தொலைபேசி மற்றும் பயனாளா்களின் புகைப்படத்துடன் மின்சார வாரியத்தின் பஅசஎஉஈஇஞ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.அதில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள புல எண் மற்றும் முகவரி சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையில் அதன் அருகில் வெளியிடப்பட்ட ஒரு சில புகைப்படம் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சில தொலைபேசி எண்களில் தவறுதலாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தெரியவந்ததை தொடா்ந்து அவைகள் கள ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டன. கவனக்குறைவால் தவறுலாக பயனாளியின் புகைப்படத்திற்கு பதிலாக சம்பந்தமில்லாத வேறு நபரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இரண்டு ஊழியா்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பயனாளிகளின் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முன்பு அதன் விவரங்கள் அனைத்தும் முறையாக கள ஆய்வு நடத்தி உறுதி செய்த பின்னா் பதிவேற்றம் செய்யும்படி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் சாலைப்புதூா் பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கல் பணி துரிதப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.