தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 11th August 2022 06:01 PM | Last Updated : 11th August 2022 06:01 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாழ்க்கையில் விரக்தியடைந்ததால் மனமுடைந்த மகன், தாயுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டார்.
மன்னார்குடி நடராஜப்பிள்ளைதெரு ஜீயர்தோப்பை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி கோமளவல்லி(81). மகன் ரவிச்சந்திரன்(55) .நாராயணசாமி இறந்துவிட்டதால் ஓரே மகன் ரவிச்சந்திரனுடன் வாடகை வீட்டில் கோமளவல்லி வசித்து வந்துள்ளார். ரவிச்சந்திரன் நாகை மாவட்டம் வேதாரணயத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் எப்போதாவதுதான் தாயாரை பார்க்க மன்னார்குடிக்கு வருவாராம். தனியே இருந்த வந்த கோமளவல்லியை அருகில் வசிப்பவர்கள் கவனித்துக் கொண்டனராம்.
நீண்ட நாள்களாக ரவிச்சந்திரன், தாயாருக்கு வயது ஆகிவிட்டதால் உடன் இருந்து கவனித்துக்கொள்ள முடியவில்லை என்றும், தனக்கு திருமண ஆகாத நிலையில் உறவினர்கள் என யாரும் இல்லை என மனமுடைந்து விரக்தியடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை கோமளவல்லி நீண்ட நேரமாக வீட்டிலிருந்து வெளியே வராததை அறிந்த அருகில் வசிப்பவர்கள், மதியம் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, தரையில் கோமளவல்லியும், ரவிச்சந்திரனும் விஷம் குடித்து இறந்து கிடப்பது தெரிய வந்ததுள்ளது.
இதையும் படிக்க: எரிவாயுக் குழாய் வெடிப்பு: கோவையில் பரபரப்பு...!
இது குறித்து,மன்னார்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து இரண்டு பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனர்.