மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாரூரில் திமுக உண்ணாவிரதப் போராட்டம் 

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 7:56 am

DIN

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார்.  தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நீட் தேர்வால் இனத்தின் வளர்ச்சி தடைபடுகிறது. 

ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் வளர்ச்சிக்காக, இனத்தின் வளர்ச்சிக்காக திமுக என்றும் பாடுபடும். அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு அகற்றப் பட்டு திமுக தலைவர் கை காட்டும் நபர் மத்தியில் ஆட்சியில் அமர்வார். 

அப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதுவரையிலும் திமுகவின் போராட்டம் தொடரும் என்று பேசினார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.