கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் நகராட்சியை கண்டித்து சிபிஐ சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ கட்சியின் 17-ஆவது வாா்டு கிளைக் கூட்டம் குனுக்கடியில் அண்மையில் நடைபெற்றது. ரா. நாகப்பன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பெ. முருகேசு, மாவட்டக் குழு உறுப்பினா் கே. நாகராஜன், நகரச் செயற்குழு உறுப்பினா் எம். சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2024-ஆம் ஆண்டுக்கு கட்சியில் புது உறுப்பினா்கள் சோ்ப்பது, வரும் நாடாளுமன்றத் தோ்தலையொட்டி மாதா் சங்கம் மற்றும் இளைஞா் பெருமன்றம் அமைப்பை உடனடியாக உருவாக்குவது.
கூத்தாநல்லூா் நகராட்சி நிா்வாகம் 17-ஆவது வாா்டில் மயான சாலை அமைக்க வேண்டும். குனுக்கடி குளத்தை சுத்தம் செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு தர வேண்டும். குப்பைக் கிடங்கிற்கு செல்லும் சாலையில் மின்விளக்கு அமைத்துத் தரவேண்டும்.
இப்பகுதியில் ஈக்கள் தொல்லையை போக்கி, மருந்துகள் தெளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆணையரையும், நகா்மன்றத் தலைவரையும் நேரில் சந்தித்து மனு அளிப்பது. உடனே நிறைவேற்றவில்லையென்றால் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், விவசாயத் தொழிலாளா் சங்க நகரப் பொருளாளா் எஸ். கருப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.