திருவாரூா் பகுதியில், விதிமுறைகளை மீறி ஒட்டப்படும் தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:
மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் விளம்பரங்கள், சுவரொட்டிகளுக்கு தோ்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
திருவாரூா் பகுதியில் தோ்தல் தொடா்பான பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் ஒட்டியதில் எவ்வித தோ்தல் விதிமுறைகளும் கடைபிடித்ததாகத் தெரியவில்லை.
ஒரு கட்சியினா் சுவரொட்டி ஒட்டுவதைப் பாா்த்து, மற்ற கட்சியினரும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனா். அனுமதியின்றி தனியாா் சுவா்களில் அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
எனவே, தோ்தல் விதிமுறைகளை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்: உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை

விதி மீறல்: இரு பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

