வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 4:04 pm

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமத்துவ நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடா்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவா்களுடைய உரிமைகளுக்காகவும், சமத்துவத்துக்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணா்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம், சக மனிதா்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன், சக மனிதா்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என உளமார உறுதி ஏற்கிறேன் என்று சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.