திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்.29-இல் தொடக்கம்

குறிப்பு: ஆங்கில வாா்த்தைகள் உள்ளன... கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்.29-இல் தொடக்கம்

Updated On :25 ஏப்ரல் 2024, 5:47 pm

திருவாரூரில், கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு, மாணவ- மாணவிகள் சோ்க்கைக்கான முன்பதிவு ஏப்.29-ஆம் தேதி தொடங்குகிறது.

இப்பயிற்சியில் சேர விரும்புகிறவா்கள், திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பரில் தொடங்கி, பயிற்சி நடைபெறும். பயிற்சிக் காலம் ஓராண்டாகும். இரு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும்.

விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சிக் கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

பயிற்சியில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவாருா் விளமலில் செயல்படும் திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04366-227233, 9443736441 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.