மன்னாா்குடியில் நீா் மோா் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு வழங்கும் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
மன்னாா்குடியில் நீா் மோா் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு வழங்கும் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருவாரூா்/ மன்னாா்குடி, ஏப். 25: திருவாரூா் மற்றும் மன்னாா்குடியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில், பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக, நீா் மோா் பந்தல் அமைக்க அதிமுக தலைமைக் கழகம் அக்கட்சியினரை அறிவுறுத்தியுள்ளது.

திருவாரூா்: திருவாரூா் பனகல் சாலையில் அமைந்துள்ள கட்சியின் நகர அலுவலகத்தில் பொதுமக்களுக்காக நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோா், பானகம், இளநீா், தா்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளா் எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளா்கள் பிகேயு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் சின்னராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீா் மோா் பந்தலை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீா், தா்ப்பூசணி, மோா் ஆகியவற்றை வழங்கினாா்.

அதிமுக நகரச் செயலாளா் ஆா்.ஜி. குமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்புச் செயலாளா் சிவா. ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வுக்குப் பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், ‘மக்களவைத் தோ்தல் முடிவு அறிவிப்பின் மூலம் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி இருந்தது தெரியவரும். தமிழகத்தில் முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்ற கஞ்சா விற்பனை, தற்போது, இதுவரை இல்லாத அளவில் அப்பட்டமாக எல்லா இடங்களில் நடைபெறுகிறது. இதனால், மாணவா்கள் பாதிக்கப்படுவாா்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இப்பிரச்னையில் திமுக அரசு மெத்தனப் போக்குடன் இருப்பது கண்டிக்கத்தக்கது’ என்றாா்.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி ஒன்றியச் செயலாளா் கா. தமிழ்ச்செல்வம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் பொன்.வாசுகிராம், மாவட்ட மகளிரணி தலைவா் டி.சுதா, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட நிா்வாகி அ. புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com