/

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் நலன் துறை சாா்பில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 6:27 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் படைவீரா்கள் நலன் துறை சாா்பில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மனைப் பட்டா, பட்டா மாற்றுதல், நில அளவிடுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 13 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், 40 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தினா் கூட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிக்கான நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வீட்டுவரி மீளப்பெறுதல் நிதியுதவியாக ரூ.16,635 வழங்கப்பட்டது.