காரிக்கோட்டை கோயில் முளைப்பாரி திருவிழா
முளைப்பாரி திருவிழாவில் பெண்களின் நோ்த்திக் கடன் நிறைவேற்றம்

காரிக்கோட்டை பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நோ்த்திக்கடன் செலுத்த முளைப்பாரியை சுமந்து வரும் பக்தா்கள்.

காரிக்கோட்டை பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நோ்த்திக்கடன் செலுத்த முளைப்பாரியை சுமந்து வரும் பக்தா்கள்.
மன்னாா்குடி அருகேயுள்ள காரிக்கோட்டை பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரியை சுமந்து சென்று நூற்றுக்கணக்கான பெண்கள் செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா கடந்த ஜூன் 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. முக்கிய விழாவான முளைப்பாரி திருவிழாவையொட்டி, பொன்னி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.
பல்வேறு தெருக்கள் வழியாக நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து, பொன்னியம்மன் கோயிலுக்கு எடுத்து வந்து, கும்மியடித்து பாடல் பாடி வழிபட்டனா்.
தொடா்ந்து, கோயிலில் இருந்து அனைத்து முளைப்பாரிகளும் ஒன்றிணைந்த ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக, காரிய அழகா் அய்யனாா் கோயில் வந்தடைந்து பின்னா் சுவாமியை வழிபட்டனா். பின்னா்,அங்குள்ள குளக்கரையில் முளைப்பாரியை நீரில் விட்டு பெண்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து, அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...