மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.96,011 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் 51 பயனாளிகளுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,13,467 மதிப்பிலான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டா் 3 பயனாளிகளுக்கும், கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் 2 பயனாளிகளுக்கும், ரூ.7,900 மதிப்பிலான சக்கர நாற்காலி 4 பயனாளிகளுக்கும், திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் 2 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.55,63,494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com