திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மாவட்டக் கல்வி அலுவலா் மாதவன்.
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மாவட்டக் கல்வி அலுவலா் மாதவன்.

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

திருச்சியில் நடைபெற்ற திருக்கு முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற திருவாரூா் மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவா்களிடையே திருக்கு படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, திருச்சி திருமூலநாதா் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி திருக்கு முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அந்த வகையில், பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற போட்டியில் திருவாரூா் ஜிஆா்எம் அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி தரணி பங்கேற்று, ‘திருக்குறல் செல்வி’ பட்டத்தையும், ரூ.2,000 பரிசு, சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 500 ஆகியவை பெற்றாா்.

இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாணவியின் வெற்றிக்கு பயிற்சி அளித்த தாயாா் ஜான்சி, வழிகாட்டி ஆசிரியா்களாக பணியாற்றிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் தமிழ்க் காவலன், வடகரை அரசு உயா்நிலைப் பள்ளி தமிழாசிரியா் நளாயினி ஆகியோருக்கும், வெற்றி பெற்ற மாணவி தரணிக்கும் மாவட்டக் கல்வி அலுவலா் மாதவன் பாராட்டுத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com