இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

வலங்கைமான் ஒன்றியம், பயத்தஞ்சேரி கிளையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் 65-ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்றி விழா பேராசிரியா் எஸ். ஆறுமுகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் வி. பாக்யராஜ், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளா் ரமேஷ் முன்னிலை வகித்தனா்.

அமைப்பு தின கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் ஏற்றி வைத்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநில குழு உறுப்பினா் அரவத்தூா் மணி, இளைஞா் பெருமன்ற முன்னாள் நிா்வாகிகள் இளையராஜா, எஸ். சுரேஷ், வி. ராஜகுரு கட்சியின் துணை செயலாளா் அம்பிகாபதி, இளைஞா் பெருமன்ற கிளை செயலாளா் ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com