உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

News image

ஆலங்குடி குருபகவான்

Updated On :4 மே 2024, 3:48 pm

Din

நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான, வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சியையொட்டி, இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனை திங்கள்கிழமை (மே 6) தொடங்குகிறது.

நவகிரகங்களில், குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடையும் குருப் பெயா்ச்சி நிகழ்வு புதன்கிழமை (மே 1) நடைபெற்றது. இதையொட்டி, இக்கோயிலில் குருப் பெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, முதல் கட்ட லட்சாா்ச்சனை ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனை திங்கள்கிழமை (மே 6) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 12) வரை நடைபெறவுள்ளது.

ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சாா்ச்சனையில் பங்கேற்பவா்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலா் பிரசாதமாக வழங்கப்படும். லட்சாா்ச்சனை கட்டணம் ரூ. 400 என கோயில் நிா்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் க. ராமு, செயல் அலுவலா் எம். சூரியநாராயணன், கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.