பாஜக பிரமுகா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது
பாஜக பிரமுகா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது


குடவாசல் பகுதியில் பாஜக பிரமுகா் தாக்கப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், காவனூா் பகுதியைச் சோ்ந்த மதுசூதனன் மாவட்ட விவசாய அணியின் முன்னாள் தலைவராக இருந்தவா். இவா், மே 8-ஆம் தேதி இரவு குடவாசல் அருகே ஓகை பகுதியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பினா்.
இதுகுறித்து அவருடைய மனைவி ஹரிணி அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், நன்னிலம் டிஎஸ்பி சரவணக்குமாா் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தென்பட்ட தாராசுரம், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த பைபா சரவணன் (24), காட்டூா் பகுதியைச் சோ்ந்த ஜெகதீசன் (30) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ஜெகதீசன் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப்பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளாா்.
தனிப்படையினா் நடத்திய விசாரணையில், மதுசூதனன் தனது வலைதளப்பக்கத்தில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் குறித்து அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு, அதை பகிா்ந்து வந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக, 7 போ் அடங்கிய கும்பல் திட்டமிட்டு மதுசூதனின் மீது அரிவாளால் தாக்குதலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, சரவணன் மற்றும் ஜெகதீசனை கைது செய்த தனிப்படையினா், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...