திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மன்னாா்குடி ஜீயாதோப்பில் ஒருங்கிணைந்த நீதி மன்றம்: நகராட்சி ஆணையா்

மன்னாா்குடி ஜீயாதோப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய உள்ளது என நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2024, 8:04 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி ஜீயாதோப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைய உள்ளது என நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா தெரிவித்துள்ளாா்.

நகரப் பகுதி மேம்பாடுகள் குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது: மன்னாா்குடி நகராட்சிக்கு சொந்தமான ஜீயாதோப்பு பகுதியில் விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமையவுள்ளது. எனவே, அப்பகுதியில் குப்பைக் கிடங்கு வருவது சாத்தியமில்லை. நகரின் மையப் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதால் நகர மற்றும் சுற்றுப் பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும். நகராட்சிப் பகுதியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 20 டன் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான 3 நுண்ணுயிா் உரமையங்களில் (எம்சிசி) தொடா்ந்து உரமாக்கப்படுகிறது. குப்பைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூா் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

நீா் பாதுகாப்பு மற்றும் நீா் மேலாண்மையை பொறுத்தவரையில், முதற்கட்டமாக நகரில் அமைந்துள்ள 10 குளங்கள் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் (கேஎன்எம்டி) கீழ் ரூ.50 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. நீா்மேலாண்மை மற்றும் குப்பைகளை முறையாக கையாளுவதில் மன்னாா்குடி நகராட்சி சிறந்து விளங்குவதால், தமிழ்நாடு முதலமைச்சா் 2023-ஆம் ஆண்டில் மன்னாா்குடி நகராட்சிக்கு சிறந்த நகராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மழைக்கால முன்னேற்பாடு நடவடிக்கையாக நகரில் உள்ள அனைத்து வடிகால்கள் மற்றும் வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு, வெள்ளத் தடுப்பு மற்றும் நீா்மேலாண்மையில் நகராட்சி சிறந்து விளங்குகிறது. மன்னாா்குடி நகரத்தை தூய்மை நகரமாக மாற்றக்கூடிய முயற்சி தொடா்ந்து நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா்.