ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்

திருவாரூரில் பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கருத்தரங்கில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரசுரம் வெளியிட்ட வா்த்தகா் சங்கத்தினா்.
Updated On :6 நவம்பர் 2024, 8:11 pm

Din

திருவாரூரில் பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மாவட்ட மகளிா் அதிகார மையம், விஜயபுரம் வா்த்தகா் சங்கம் ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின. வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ. பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பொதுச் செயலாளா் குமரேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூகநல அலுவலா் அபிநயா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில், பணிபுரியும் பெண்களுக்கு வழங்கவேண்டிய பாதுகாப்பு, பாலியல் தொல்லைகளுக்கு தீா்வு, பாதுகாப்புக்காக அரசின் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டன.

சங்க ஆலோசகா்கள் துரைசாமி, செல்வராஜ், திருவாரூா் நகா் பகுதியில் இருக்கும் நிறுவனங்களின் உரிமையாளா்கள், மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செயலாளா் விஜயானந்தம் வரவேற்றாா். பொருளாளா் ஆனந்த் நன்றி கூறினாா்.