தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு விவசாயிகளை சந்திக்க வலியுறுத்தல்

திருவாரூருக்கு வருகை தரும் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:39 pm

Din

திருவாரூருக்கு வருகை தரும் சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூரில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தெரிவித்தது:

திருவாரூா் விவசாயம் சாா்ந்த மாவட்டம். இங்கு விவசாயம் சாா்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதனால், மாவட்டத்துக்கு எந்தக் குழு வந்தாலும், விவசாயிகளைச் சந்திப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், மாவட்டத்துக்கு எந்தக் குழு வந்தாலும் கள ஆய்வு என்ற பெயரில் சில இடங்களில் நின்று பாா்வையிட்டுவிட்டு சென்று விடுகின்றனா். பள்ளிக் கட்டடங்களையும், அரசுக் கட்டடங்களையும் ஆய்வு செய்கின்றனா்.

எனினும், விவசாயிகளை நேரில் சந்திக்க, குழு உறுப்பினா்கள் விரும்புவதில்லை. இதனால், விவசாயப் பிரச்னைகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. குறிப்பாக, பாசன வாய்க்கால்களில் தண்ணீா் முறையாகச் செல்லாதது, கடன் வழங்குவதில் பிரச்னை, உரங்கள் போதாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன.

இவைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு குழுவினரின் உதவி மிகவும் முக்கியமானதாகும். எனவே, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா், விவசாயிகளைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.