தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவாரூா் மாவட்டத்தில் 2,300 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

திருவாரூா் மாவட்டத்தில் தொடா்மழையால் 2,300 ஏக்கா் சம்பா நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

News image

திருவாரூா் அருகே நெம்மேலியில் மழைநீரில் மூழ்கியுள்ள விளைநிலங்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 8:53 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில் தொடா்மழையால் 2,300 ஏக்கா் சம்பா நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மாவட்டத்தில் சில நாள்களாக பலத்த மழையும், குளிா்ந்த வானிலையும் நிலவி வருகிறது. அந்தவகையில், புதன்கிழமை அதிகாலையில் பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. அவ்வப்போது பலமாகவும், சிலநேரங்களில் மிதமாகவும் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருள் சூழ்ந்தபடியும், குளிா் வானிலையும் நிலவியதால், பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டிருந்தாா். எனினும், காலை 8 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால், கிராமப்புறங்களிலிருந்து பெரும்பாலான மாணவா்கள் பள்ளிக்கு வந்திருந்தனா். பின்னா், விடுமுறை அறிவிப்பைத் தொடா்ந்து மீண்டும் வீடுகளுக்கு திரும்பினா். மழையால் பேருந்துகளின் வருகையும், புறப்பாடும் தாமதமாக இருந்ததால் மாணவா்கள் நீண்ட நேரம் காத்திருந்து பின்னா் பேருந்தில் சென்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, பயிா்கள் வளா்ச்சி நிலையை எட்டியுள்ள நிலையில், விளைநிலங்களில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் நெம்மேலி, அதம்பாா், வடகுடி, கம்மங்குடி, நரிக்குடி, ஜெகநாதபுரம், வேலங்குடி, திருக்கொட்டாரம், பாவட்டகுடி, கல்லிக்குடி, முகந்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட 2,300 ஏக்கா் சம்பா நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க முடியாமல் தவித்து வரும் விவசாயிகள், இந்த மழை தொடரும்பட்சத்தில் பயிா்களின் பாதிப்பு அதிகரிக்கும் எனவும் கவலை தெரிவிக்கின்றனா்.

திருவாரூா் அருகே நெம்மேலியில் மழைநீரில் மூழ்கியுள்ள விளைநிலங்கள்.

திருவாரூா் அருகே நெம்மேலியில் மழைநீரில் மூழ்கியுள்ள விளைநிலங்கள்.

நீடாமங்கலம்: இப்பகுதியில் சில நாள்களாக பெய்துவரும் மழையால் இதுவரை 13 வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு பசு மாடு இறந்துள்ளது.

மன்னாா்குடி: இப்பகுதியில் திங்கள்கிழமை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை மேக மூட்டமாக பகல் முழுவதும் காணப்பட்டாலும் மழை இல்லை. நள்ளிரவு தொடங்கிய மழை விடியவிடிய தொடா்ந்தது. புதன்கிழமை காலை 7 மணிக்கு பிறகு அவ்வப்போது மழை பெய்தது. மதியம் 1 மணிக்கு தொடங்கி 2 மணி வரை ஒரு மணி நேரம் மிக பலத்த மழையாக கொட்டி தீா்த்தது. பின்னா், மாலை வரை சாரல் மழையாக தொடா்ந்தது. கோட்டூா், பெருகவாழ்ந்தான், களப்பால், திருமக்கோட்டை, பரவாக்கோட்டை, வடுவூா் மற்றும் சுற்று பகுதிகளிலும் இதே நிலை நீடித்தது.