நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

News image

திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:55 pm

Din

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக காவல் துறையை கண்டித்தும், 47 நாள்களாக தங்கள் உரிமைக்காக போராடும் தொழிலாளா்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றக் கோரியும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெய்கிஷ், மாதா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பவானி, மாணவா் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் பா. விக்கி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. கோமதி, வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வேலவன், மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுகதேவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.